வரலாற்றை
ஒரு துளி : பாசுபத
யோகக் கலையின் துவக்க ஆசிரியர்
" லகுலீசர் " சௌராஷ்ட்ரா சோமநாத கோவிலில் சிவனை
பாசுபத முறையில் வழிபாடும் முறையை கண்டவர். *தமிழாக்கம் தெஸ்வான் தி ஆர் பாஸ்கர்*
பாசுபதா
(பாசுபதியிலிருந்து, சிவன், ‘ஆத்மாக்களின் இறைவன்’
என்று பொருள்) சைவ சந்நியாசி
துறவிகளின் மிகப் பழமையான பிரிவு.
குஜராத் சௌராஷ்ட்ரா பாசுபத சைவ சமய
பிரிவின் தோற்றுவாய். சௌராஷ்ட்ராவில் உள்ள சோம்நாத் கோயில்
மற்றும் நேபாளத்தின் பாசுபதிநாத் கோயில் ஆகியவை அவற்றின்
மிகவும் பிரபலமான வழிபாட்டுத் தலங்கள். பாசுபதம் என்பது
முதன்மையாக இயங்கியல் தர்க்கத்தை நிராகரிக்கும் சந்நியாசியான பாதையாகும், இது சிவனின் இரக்கமுள்ள
கிருபையை (கருணா) செயல்படுத்துவதற்கான ஒரு
வழியாக சாதனைக்கு பரிசளிக்கிறது,
இது அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுதலை அல்லது
விலகலுக்கு அவசியமானது.
அறிவின்
தேடலில் இறுதிக் கட்டத்தில், தேடுபவர்
பாசுபத-யோகாவைப் பயிற்சி செய்கிறார், இது
யோகிக்கு ஒரு குகையில் தங்கும்படி
கட்டளையிடுகிறது, இது உலகின் ஈர்ப்புகளுக்கு
உட்படுத்தப்படாமல் தனது துறவறத்தை தீவிரப்படுத்துகிறது;
ஒரு நாளைக்கு மூன்று முறை சாம்பலில் குளிக்க
வேண்டும், சிவனின் வடிவத்தை பின்பற்றவும்,
நடனமாடவும், அவரிடம் பக்தியுடன் போதத்துடன்
இருக்க வேண்டும். கடந்த, நிகழ்காலம் மற்றும்
எதிர்காலம் ஆகிய அனைத்து பொருட்களிலிருந்தும்
தனது மனதைத் திரும்பப் பெறுவதன்
மூலம் அவர் தியானத்தை கடைப்பிடிக்கிறார்
- மேலும் அதை சிவன் மீது
பக்தி செலுத்துகிறார். சிவனைப் பற்றி தியானிக்கும்
போது, பாசுபத யோகி சிவனின்
சக்தியைப் பற்றி தியானிக்க வேண்டும்,
ஏனெனில் உலகம் முழுவதும் அவர்கள்
இருவராலும் பரவியுள்ளது. சிவ-மஹா-புராணத்தில்
உள்ள ‘வாயவீயா சம்ஹிதா’ பாசுபதா-யோகாவை பின்வருமாறு விவரிக்கிறது:
யோகி ஒரு கல் துண்டு
போல உட்கார்ந்து மூக்கின் நுனியில் தனது கவனத்தை சரிசெய்ய
அறிவுறுத்தப்படுகிறார். சிவனையும் சக்தியையும் தனக்குள்ளேயே சிந்தித்து தியானிக்க வேண்டும், அவை இதயத்தின் இருக்கையில்
நிறுவப்பட்டிருப்பது போல. தியானம் முதலில்
ஒரு பொருளுடன் தொடங்க வேண்டும்; பின்னர்
அது பொருளற்றதாக மாறும். சிவன் உருவமற்றவர்
(நிஸ்கலா), மற்றும் பேச்சால் வெளிப்படுத்தக்கூடிய
எதையும் (வாக்-விசுதா) தொடர்புபடுத்தாதவர்
என்பதால், அவரது உருவமற்ற தன்மையை
மட்டும் தியானிக்க வேண்டும் என்று பாசுபதர்கள் நம்புகிறார்கள்.
தொடர்ச்சியான தியானம் சாயுஜ்யாவில் முடிவடைகிறது,
அதாவது சிவனுடன் நிரந்தர தொடர்பு இருப்பது.
பாசுபதம் என்பது துக்கஹாந்தா, அதாவது
எல்லா துக்கங்களிலிருந்தும் நித்தியமாக பிரிந்து இருத்தல்.
பாசுபதம் சொல்லும் துக்க விடுதலை
கைவல்யம்
என்னும் வீடு பேறு உடையோர்களுக்கும் துக்கம்
வருவது உண்டு. ஆதலின் அவற்றை கார்யம், காரணம் என்பதை விளக்கிக் கூறுபவர் குரு. இதில் அடைய வேண்டியது என்ன, அதை அடையும் உபாயம் என்ன என்று பிரத்யேகமாக விளக்குபவர்
குரு. இதை அடையும் நிலை எது என்று கூறுபவர் குரு. இதை அடைய வேண்டுமென்று முயல்பவன்
தனது இந்திரியங்களை அடக்கும்
வல்லமை பெற வேண்டும்.
பாசுபதவிரதிகள் என்பவர் பிராமண யோகிகள். எவ்வாறு குருவுக்கு சில யோக்யதைகள் தேவையோ அது போல சீடனுக்கும் சில தகுதிகள் தேவை. அவை சிச்ரூசை செய்தல், அறிதல், திருப்திபடுத்தல், சைவ நிலையை அடைய வேண்டும் என்ற அவா முதலிய தகுதிகள் சீடனுக்கு இருத்தல் வேண்டும். இவ்வாறு இந்திரன், கோசிகன் முதலியோர் எல்லாம் ஆர்வம் கொண்ட சீடர்களாகத் திகழ்ந்தனர்.
அவர்களுக்குப்
போதிக்கும் பொருட்டு மகேஸ்வரன், மனித உருவில் குஜராத் மாநிலத்தில் காயாவரோஹணம்
(கார்வான்) என்ற இடத்தில் பிராமண குலத்திலே பிறந்தார். அவர் நல்ல சீடனைத் தேடிக் கால்நடையாகப் பல
இடங்களுக்கு நடந்து
உஜ்ஜயினியை அடைந்தார். சீடனை அடைவதற்கும் உரிய
சின்னங்களைக் காண்பதற்கு
அங்கே அத்யாசிரமத்தை அடைவதற்குரிய
சின்னங்களைக் கண்டு
சிறந்த சீடர்களுக்கு உபதேசித்தார்.
குருவின் பெயர்தான் லகுலீசர். இவர் தோற்றுவித்த சைவப்
பிரிவுதான் பாசுபதம் எனப்படும்.
குடிமல்லத்தில்
உள்ள பசுபதி லகுலீசர் பிறப்பித்த நடைமுறைகள்
விபூதியில் ஸ்நானம் செய்தல் வேண்டும். சாம்பலில் படுத்துறங்க வேண்டும். அதில் நடனம் செய்தல் வேண்டும். நிர்மால்யங்களைத் (பரமன் அணிந்த மாலைகள்) தரித்துக்கொள்ள வேண்டும். தங்கள் சாத்திரங்களைப் பின்பற்றிக் கட்டப்பட்ட கோயில்களில்தாம் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளைத் தோற்றுவித்தார்.
லகுலீசரின் சமய தத்துவங்கள்தாம் பாசுபத சைவம் என்ற பெயர் பெற்றன. இவர் எழுதிய நூலுக்குப் பாசுபத சூத்திரங்கள் என்று பெயர். வியாச முனிவர் எழுதிய ‘பிரும்மசூத்திரம்’ என்ற நூல் போல் இந்நூல் மிகவும் புகழ்வாய்ந்தது.
இது
ஐந்து அத்தியாயங்களைக் கொண்டது.
இதில் யோகம் இன்றியமையாத நிலை
வகிப்பதால், இதை யோக பாசுபத சைவம் என்றும் அழைப்பர். நூல் முற்றிலும் தொல்காப்பிய சூத்திர
வடிவிலேயே உள்ளது.
ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலுக்கு கௌண்டின்யர் என்ற முனிவர் எழிலான உரை எழுதியுள்ளார். இவ்வுரை, உரைகளில் எல்லாம் சிறந்த உரை.
பசுபதியினுடைய பாசுபத யோக விதிகளை விளக்குகிறோம் என்பதால் இதன்படி இச்சமயத்தின்படி இறுதிநிலை என்பது மோக்ஷம் என்பது யாது எனில், எப்பேர்ப்பட்டவர்களும் துக்கத்திலிருந்து கொண்டு உழல்கிறார்கள். அத்துக்கத்திலிருந்து விடுபடுவதுதான் இறுதிநிலை. அதைத் துக்க + அந்தம் என்று கூறுவர். விதி என்றால் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். செய்யாமல் இருக்க முடியாது. அதைத்தான் விதி என்பர். ஆத்மா, ஈசனோடு ஐக்கியமாவதுதான் யோகம், சிவயோகம் எனலாம்.
சைவம் சிவபிரானை முழுமுதற் கடவுளாகக் கொண்டது. அவன் அருளாளேதான் அவன் தாளை நாம் வணங்க முடியும். நாம் பாசுபத யோக மரபைப் பின்பற்ற முயன்றால் அவன் அருள் நமக்குக் கிட்டும். அவன் அருளால் அவனோடு ஐக்கியமாவோம் என்பது சைவ பாசுபதர்களின் துணிபு. இம்மரபுப்படி துக்கத்தின் இறுதியும் பரமனுடன் ஐக்கியமாவதும் ஒன்றுதான். ஆதலின் பாசுபத மரபுப்படி ஞானம், வைராக்கியம், தர்மம், ஐச்வரியம், ஆகமங்களால் மட்டும் துக்காந்தம் பெற முடியாது. பரமனின் அருளால் மட்டும்தான் அது முடியும் என்பது இவர்கள் கொள்கை.
பசு என்றால் என்ன?
பாசுபத விரதம் என்றால் என்ன என்று லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உடலை விபூதியால் குளிவித்து, விபூதியணிந்து பரமனிடம் பசுபோல் நின்று வேண்டிடின் பாசுபதம் கிட்டும் என்பர்.
பசு
என்றால் என்ன என்பதையும் இப்பிரிவு விளக்குகிறது. மனிதர்க்கு
அறிவும் ஆற்றலும் நிறைந்து உள்ளன. ஆனால், அவன் தனது ஆற்றலைச் செலுத்த இயலாது, தனது இந்திரியங்களால் கட்டப்பட்டு
வலுவிழந்து வாழ்கிறான். இதையே பந்தம், கட்டு என்றும் அழைக்கிறோம். இப்பந்தங்களால்
கட்டப்பட்டு வாழ்வதையே
பசு என்றழைக்கிறோம். பசுக்களாக
வாழும் நாம், நமது முழு வலிமையுடன் திகழ வேண்டுமெனில் இப்பந்தங்களை
அறுத்துத் தள்ள வேண்டும். அந்த நிலையை நமக்கு வழங்க பதியாகிய சிவபெருமானால்தான் முடியும்.
அவர் நமக்குக் காட்டியதுதான் பாசுபத
யோகம்.
இந்தப் பதி, பசு, பந்தம், யோகவிதி, துக்காந்தம் என்பவற்றை பஞ்சார்த்தங்கள் என்று கூறுவர். பாசுபத யோகம் என்பது இந்த ஐந்து பொருள்களின் அடிப்படையில் நிலைப்பது ஆதலின் இதை பஞ்சார்த்த ஞானம் என்றும் கூறுவர்.
ஆறாம்
நூற்றாண்டில் வாழ்ந்த
அப்பர் சுவாமிகள் ஒரு பாடலில் பாசுபதர்களைக் குறிக்கிறார்.
திருவாரூரில் திருவிழா
நடைபெறும்போது தெருவினில்,
அந்தணர், சைவர், பாசுபதர், காபாலிகர் என்போர்கள் உலா வந்தனர் எனக் கூறுகிறார்.
அருள்மணி தடம் பூண் முலை
அரம் பைரயரோடு
அருளிப்பாடியர் உரிமையில்
தொழுவார்
உருத்திரப் பல்கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர்,
சைவர், பாசுபதர் காபாலிகர்
தெருவினில் பொலியும் திருவாருர்
அம்மானே
என்று பாடுகிறார். பாசுபத மரபான சாம்பலைப் பூசி, புரண்டு, புரியும் பல செயல்பாடுகளையும் ஆங்காங்கே அப்பர் கூறிச் செல்கிறார்.
இந்திய நாட்டிலேயே மிகவும் தொன்மையான சிவலிங்கம் தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது. குடிமல்லம் என்னும் அவ்வூர் தமிழ்நாட்டின் பகுதியாக 1950 வரையில் இருந்தது. திருப்பதியை ஆந்திரத்துடன் சேர்த்தபோது ஆந்திர மாநில எல்லைக்குட்பட்டுள்ளது. இங்கு மிக மிகப் பழமையான சிவலிங்கம் உள்ளது. அது 2,200 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சிவலிங்கக் குறியிலிருந்து சிவபெருமான் நின்ற நிலையில் உள்ளார்.
அபஸ்மாரன் மீது நிற்கும் அவரது ஒரு கையில் கமண்டலமும் மற்ற கையில் ஒரு மான் தொங்குதல் போலும் உள்ளது. அவரது இடப்புறத்தில் ஒரு கூர்மையான தண்டத்தில் பரசுபோலக் காணப்படுகிறது அவரது தலைசடைமுடி. இந்நூலின் உள்ள பல லகுலீச சிற்பங்களில் உள்ள சடைமுடி போலவே உள்ளது. ஆக இதனை பசுபதியின் உருவமாகக் கொள்ளலாம்.
(
‘தமிழகத்தில் லகுலீச
பாசுபதம்’ நூலுக்குத்
தொல்லியல் அறிஞர்
இரா. நாகசாமி
எழுதிய முன்னுரையின்
சுருக்கம் இது.)
தமிழகத்தில் லகுலீச பாசுபதம்
மங்கை ராகவன், சீ. வீரராகவன், சுகவன முருகன்
வெளியீடு: புது எழுத்து, 2/ 203, அண்ணா நகர்,
காவேரிப்பட்டினம் - 635 112
விலை : ₹400, அஞ்சல்,
கூரியர் செலவு இலவசம்.
தொடர்புக்கு : 9842647101
No comments:
Post a Comment