Thursday, 12 September 2019

சவுராஷ்டிரா குஜராத்தில் ஏன் இத்தனை மொழிகள் ? !



சவுராஷ்டிரா குஜராத்தில் ஏன் இத்தனை மொழிகள் ? !
பதில் கூறும் முன், அரசின் சர்வே அறிக்கை கீழே தந்துள்ளேன். 

குஜராத், சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகள்  50 மொழிகளில் பேசுகிறது, 30 கிளைமொழிகள் மறைந்துவிட்டன ..  2016 ஆம் ஆண்டு சர்வே கூறுகிறது.  
1961 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வே இல் குறிப்பிடப்பட்ட மொழிகளில் 30 மொழிகள் அழிந்து விட்டன !! 

குஜராத்தில் எந்த மொழி பேசப்படுகிறது? சட்டென்று பதில் வரும் குஜராத்தி என்று. ஆனால் அதை நம்புங்கள்  50  க்கும் மேற்பட்ட  மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. இவைகளில் சித்தி மொழித்தவிர பிற அனைத்தும்  குஜராத்துக்கு, சௌராஷ்டிரத்திற்கு, கட்ச், டையூ, தாமன், தாத்ரா நகரஹவேலிக்கு  சொந்தமானவை.
வதோதரா, பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையத்தால் (பிஆர்பிசி) தொடங்கப்பட்ட இந்தியாவின் மக்கள் மொழியியல் கணக்கெடுப்பின் அளவு (பிஎல்எஸ்ஐ) குஜராத், டையூ, தாமன் மற்றும் தாதர் நாகரவேலி ஆகியவற்றில் மொழிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
குஜராத் ஆளுநர் கோஹிலால் 2016  ஆம் ஆண்டில் இந்த தொகுதி வெளியிடப் பட்ட  902 பக்க தொகுதி, பழங்குடி பிராந்தியங்களில் பேசப்படும் 24 மொழிகள் உட்பட 50 மொழிகளை அடையாளம் கண்டுள்ளது. நாடோடி சமூகங்களில் 11 மொழிகளும், கடலோரப் பகுதியைச் சேர்ந்த 5 மொழிகளும் இதில் அடக்கம். 

40 க்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட ஆறு மாநிலங்களில் குஜராத்-ம் ஒன்று .

1961 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 80 மொழிகள்  தாய்மொழியாக கொண்டவர்களை அடையாளம் கண்டிருந்தது. தற்போது 2016  சர்வே இல் மொழிகளின் எண்ணிக்கை 50 ஆகக் குறைந்துவிட்டது.  30 மொழிகள் மாநிலத்திலிருந்து மறைந்துவிட்டன என்று  தலைமை ஆராய்ச்சியாளர் மற்றும்  "பிஆர்பிசி பத்மாவின்" நிறுவனருமான "பத்மஸ்ரீ கணேஷ் தேவி" தெரிவித்தார். ஆய்வு அறிக்கைகளை காஞ்சி படேல் எழுதி உள்ளார். 
அழிவின் விளிம்பில் இருக்கும் தொடர் மொழிகளையும் இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. கரையோரப் பகுதியான மங்கெலி மற்றும் கர்வா பழங்குடி மொழிகளான துங்ரி பில்லி, நாயகி, கதோடி, கதாலி, மற்றும் தலவியா ரத்தோட் மற்றும் சிதி மொழி ஆகியவை இதில் அடங்கும்.

---------  இது தான் சர்வே கூறும் தகவல் ...

ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு ஐம்பது முதல் எழுபத்தைந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு மொழி பேசப்படுகிறது என்றால் நம்ப முடியுமா ? குஜராத்தில் தான் இது !!!! அப்படி என்றால் அம்மாநிலத்தில் எத்தனை மொழிகள் இருக்கும் ?  80  அல்லது 50  அல்ல !!! சில நூறுகள் இருக்கும் ! அப்படியானால் மக்கள் தங்களுக்குள் எப்படி பேசிக் கொள்வார்கள் ?  மிகவும் சிரமம் ஆயிற்றே ?  
அது தான் இல்லை ...
இந்த அனைத்து மொழிகளும் ஒன்றுக்கொன்று மிக நெருங்கியவை.  ஒரு சில வேறுபாடுகள் களைந்தால் அவை ஒரே மொழியே !  ( நிர்வாக காரணத்திற்காக அரசர்கள் ஒரே இரவில் ஒரு மொழியை உருவாக்க பண்டிதர்களுக்கு ஆணை இடுவர் ... அவர்களும் செய்து விடுவர் !  எப்படி என்ற பார்முலா தெரிய வேண்டும் என்றால் என்னை தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.  தெஸ்வான்  பாஸ்கர் .  செல்பேசி : 9443468673 ) 
சௌராஷ்ட்ரி மொழி ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவலாகும் இது. 
இதில் தமிழகத்தில் பேசும் சௌராஷ்ட்ரி மொழிக்கு இணையான மொழி குஜராத், சவுராஷ்டிரா, கட்ச் அல்லது எந்த பகுதியிலாவது இருக்கிறதா அல்லது மருவி உள்ளதா ? அல்லது குஜராத்தில் இருந்தே மறைந்து விட்டதா ? என்ற கேள்விக்கு பதில் கிடைக்க குஜராத்தில் இன்ச் இன்ச்  ஆக தேடி ஆராய வேண்டும் போல உள்ளது.  கடவுள் அருள் இருந்தால் இவ்வாராய்ச்சி பணி நடக்கும்.

உலகில் இந்தியா, நைஜீரியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மொழிகள் உடையவை.

தற்கால குஜராத்தி மொழியில் உள்ள பாரசீக மொழி (பெர்சியா) வார்த்தைகள் :
வஹிவத்,  க2ட்டாவாஹி, பண்டூக், டோப் , கம்பாஜ், தர்தி3, இலாஜ், பு3ல்பு3ல், கபூத்தர், ப3தா3ம், தாலுகோ, பிஸ்தா, துகாண்தா3ர், நோக்கர், விமோ, வாஜன், குர்தா-பைஜாமா, காஃப்னி, குர்ஷி, பர்டோ, க3ர்த3ன், ப3ர்பி, ஷிரோ

தற்கால குஜராத்தி மொழியில் உள்ள போர்த்துகீசியம்: காஜு, தமாகு, படாட்டா, சாபு, சாவி, இஸ்திரி, இஸ்கோட்டாரோ, கப்தான், பகர், பிஸ்டல், மிஸ்திரி, மொசாம்பி, ஃபால்து 

No comments:

Post a Comment