வரலாற்றில் ஒரு துளி தமிழாக்கம் டி ஆர் பாஸ்கர்
மேமன் என்ற சொல் தெற்காசியாவின் மேற்குப் பகுதியிலிருந்து பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்தை (சுன்னி ஹனிபா பிரிவு) குறிக்கிறது, இதில் வரலாற்று ரீதியாக கத்தியாவருடன் (சௌராஷ்ட்ரா) தொடர்புடைய மேமன்ஸ் மக்களை குறிக்கிறது. இது கட்ச் மேமன்ஸ் மற்றும் சிந்தி மேமன்களையும் குறிக்கிறது. இவர்கள் மேமன் மொழியுடன் தொடர்புடையவர்கள். மேமன் மொழி பண்டைய சௌராஷ்ட்ரா பகுதியில் பேசப்பட்ட வட்டார வழக்கு மொழிகளில் ஒன்று. 1947 இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பல மெமன்கள் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.
யார் இந்த மேமன்கள் ? இவர்களின் பூர்விகம் ?
லோஹன்கார் என்று அழைக்கப்பட்ட கடலோடிகள், கடல்வழி வர்த்தகம் செய்பவர்கள் ஹிந்து மதத்தை பாரம்பரியமாக கொண்டவர்கள். பின் எப்படி முஸ்லிமாக மதம் மாறினார்கள் ?
மேமன் சமூகம் 15 ஆம் நூற்றாண்டில் 700 குடும்பங்களால் 6,178 நபர்களைக் கொண்டதாக்க இருந்தது. அந்தோவனின் கூற்றுப்படி, இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தட்டா என்ற ஊரை சேர்ந்த லோகனாக்கள் முஸ்லிம்களாக மாறினார். முஸ்லிம்களாக மாறினாலும் தங்கள் அடையாளம் இழக்காமல் இருக்க மேமன் என்ற சாதியினராக இஸ்லாமில் அடையாளப்படுத்திக்கொண்டனர். 16 ஆம் நூற்றாண்டில் புஜ் ஆட்சியாளரான ராவ் கெங்கர்ஜி ஜடேஜாவால் புஜ்-ல் குடியேற அழைக்கப்பட்டனர். அங்கிருந்துதான் கட்ச் மேமன்ஸ் கத்தியாவார் மற்றும் குஜராத்தின் பிரதான நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள் . கடலோடிகளாக இருந்தவர்கள் சமவெளி வியாபாரிகளாக மாறினர் !. குஜராத்தில் சூரத் முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது. சூரத்தில் வர்த்தகத்தின் விளைவாக மேமன்கள் கணிசமாக செல்வந்தர்களாக மாறினர்.
மசூதிகளை நிர்மாணிக்க மேமன் நன்கொடையாளர்கள் கணிசமான நிதி பங்களிப்புகளை வழங்கினர், இதில் டெல்லி ஜுமா மஸ்ஜித் மசூதி மற்றும் ஜாமியா மசூதி ஆகியவை அடங்கும். 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல ஆயிரம் மேமன்கள் வர்த்தகம் காரணமாக மும்பையில் குடியேறினர்.
மெமன்ஸ் பொதுவாக சுன்னி முஸ்லிம்களாக கூறிக்கொண்டாலும், பலர் சொத்து மரபுரிமை, சமூக தலைமை அமைப்பு மற்றும் உறுப்பினர்களுக்கு பரஸ்பர ஆதரவு தொடர்பான விஷயங்களில் "இந்து பொதுவான சட்டத்தை" தொடர்ந்து பின்பற்றுகின்றனர். மேமன் தங்களை புத்த க்ஷத்திரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்கிறார்கள். மேமன்களுக்குள் கூட, திருமண நடைமுறைகள் குறித்து பூர்விக ஹிந்துமத்தை பின்பற்றி தங்களுக்குளேயே பெண் கொடுக்கல் வாங்கல் செய்துகொள்கின்றனர். பிற சன்னி முஸ்லிகளிடம் சம்பந்தம் செய்வதில்லை !
No comments:
Post a Comment