வரலாற்றில் ஒரு துளி தமிழாக்கம் *தெஸ்வான் பாஸ்கர்* கி மு முதலாம் நூற்றாண்டு அரச வம்சம் ஸாதவாஹன, ஸதகர்ணி, ஸதகணி , ஸாலிவாஹன என்ற பெயர்கள் கொண்ட வம்சம் மகாராஷ்டிரா வின் ப்ரதிஷ்டான் (தற்கால பைதான் நகர் ) ஐ தலைநகராக கொண்டு அரசாண்டது. இவ்வம்சத்திற்கும் சௌராஷ்ட்ராவிற்கும் தொடர்பு உண்டு. ஸாதா-வாஹன என்றால் ஸாத் - ஏழு வாஹன - வாகனங்கள் அதாவது சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் தினந்தோறும் உதயமாகி வரும் புராண விஷியத்தின்படி இவர்கள் சூரிய வம்சத்தினர். இவ்வம்சத்தில் வந்த அரசரான " ஹாலா
" என்பவர் சௌரசேனி பிராகிருதத்தில் எழுதப்பட்ட
"காதா சப்தசதி"
என்ற பிராகிருத புத்தகத்தை பழைய மஹாராஷ்ட்ரி மொழியில் எழுதினார். பூனா அருகில் ஜுன்னார் என்ற இடத்தில் இருக்கும் நானாகட் என்ற மலையில் உள்ள சம்ஸ்கிருத மொழியில் பிரம்மி எழுத்தில் எழுதப்பட்டு உள்ள கல்வெட்டுக்கள் இவ்வம்ச தகவல் பல தெரிவிக்கின்றன. இவ்வம்சத்தை சேர்ந்த வஷிஷ்டபுத்ர ஸதகர்ணி சௌராஷ்ட்ரா அரசர் ருத்ராதமன் மகளை மணந்துகொண்டார். ஆயினும் இரு முறை தனது மாமனார் ருத்ரதாமனிடம் போர் செய்து தோற்று போனார் ! இவ்வம்சத்தில் புகழடைந்தவர் கௌதமி புத்ர ஸதகர்ணி. சாதவாஹனர்களின் பூர்விகம் மகாராஷ்டிரா என்றும் ஆந்திரா என்று இருவேறு கருத்து நிலவுகிறது
No comments:
Post a Comment