Wednesday 11 September 2019

சவுராஷ்ட்ராவின் பில்கார் ஆதிவாசிகளின் தெய்வம் "பூத் மாமா "





சவுராஷ்ட்ராவின் பில்கார் ஆதிவாசிகளின் தெய்வங்களில் ஒன்று "பூத் மாமா "
பூத் (ghost) எப்படி மாமா ஆனார் ? !
ஒரு பேயாக கடவுளை வணங்குகிறார். வெகு காலத்திற்கு முன் பாழடைந்த கோவில் ராஜ்பிப்லா காட்டு பகுதியில் இருந்தது. பின்னர் இப்பகுதியில் மக்கள் குடியுற்றம் ஏற்பட்டது. கோவிலின் அருகில் இருந்த பெரிய ஆல மரத்தை மக்கள் வெட்ட முற்பட்டபோது, அங்கு இனம் தெரியாத பிரச்னை ஏற்பட்டது. அடிக்கடி விபத்து நடந்து மக்களுக்கு இன்னல் ஏற்பட துவங்கியது. மரத்தில் இருந்த பேய்கள் கோவிலில் குடியேறி இருக்கலாம் என மக்கள் நம்பி இக்கோவிலில் பேய் வழிபாடு மேற்கொள்ள துவங்கினர். எனவே இக்கோவிலில் பேய்களுக்கு சாராயம், சிகரெட் வழங்கி பேய்களின் கோபத்தை கட்டுப்படுத்து கின்றனர். பேய் கோவிலைக் கட்டிய குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா நகரத்தில் உள்ளது.
வானியல் படி நாள் கோள் பார்த்து, ஆல்கஹால் மற்றும் சிகரெட்டுகள் பேய்களுக்கு தங்கள் கைகளாலேயே வழங்கவேண்டும். இதனால் விபத்துக்கள் குறைய துவங்கியதும். இக்கோவிலில் பூசாரி இல்லை, நீங்களே தைரியமாக பூஜை செய்து கொள்ள வேண்டும் ! மிக சிறியது இந்த கோவில்

No comments:

Post a Comment