Wednesday 11 September 2019

தஞ்சை - பெருமகளூர் சோமநாதர் கோவில் கல்வெட்டு



*வரலாற்றில் ஒரு துளி தமிழாக்கம் தெ ஸ் வான் பாஸ்கர்*
சென்ற மாதம் தஞ்சை பேராவூரணியில்  அருகில் உள்ள பெருமகளூர் சோமநாதர் கோவிலில் பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொல்பொருள் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இக்கல்வெட்டு தேவநாகரி எழுத்தில் ( மோடி ஸ்டைல் ) எழுதப்பட்டு உள்ளது.  பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த மராத்தா மன்னர் பிரதாப சிம்மனுடையது.  தொல்லியலார் மணிமாறன் இச் சோமநாதர் கோவில் குளம்  முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வெட்டப்பட்டது, பின் பாண்டிய மன்னர்கள், மராத்திய மன்னர்கள் இதனை பராமரித்து வந்தனர் என குறிப்பிட்டார். இக் கல்வெட்டில் இவ்வூர் சோமநாதர் கோவிலுக்கு மன்னர் பிரதாப சிம்மன் கொடுத்த தானங்கள் விவரம் உள்ளது.

No comments:

Post a Comment