உலக நலன் பொருட்டு கேரளாவில் உள்ள ஆரியன்காவு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் ,புனிதமான பாரம்பரியமான ஹிந்து சமயக் கொள்கைகளை நிலைநிறுத்தும் பொருட்டு மணிகண்டனாக அவதரித்த ஸ்ரீ தர்மசாஸ்தா (ஸ்வாமி ஐய்யப்பன் ), சௌராஷ்டிர சமுகத்தை சேர்ந்த புஷ்கலா என்ற பெண்ணை விவாஹம் செய்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆரியங்காவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஜெய வருடம் மார்கழி மதம் 9,19,11,12 ஆகிய தேதிகளில் (டிச. 24,25,26,27) நடைபெறுகிறது. மாம்பழ துறை ஸ்ரீ பகவதி புஷ்கலா அம்மன் கோவில் ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆரியங்காவில் இருந்து கழுதரெட்டி மற்றும் வெள்ளிமலை ஆகிய ஊர்கள் வழியாக ஜீப் அல்லது பஸ் மூலம் கோவிலை அடையலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரயும் அழைக்கிறது ஆரியன்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகாஜன சங்கம்.
No comments:
Post a Comment