Thursday, 18 December 2014

Sri DharmaSastha (Swami ayyappan) -Sri Pushkala Devi Marriage

உலக நலன் பொருட்டு கேரளாவில் உள்ள ஆரியன்காவு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில்  ,புனிதமான பாரம்பரியமான  ஹிந்து சமயக் கொள்கைகளை நிலைநிறுத்தும் பொருட்டு மணிகண்டனாக அவதரித்த ஸ்ரீ தர்மசாஸ்தா (ஸ்வாமி ஐய்யப்பன் ), சௌராஷ்டிர சமுகத்தை சேர்ந்த புஷ்கலா என்ற பெண்ணை  விவாஹம் செய்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆரியங்காவில் கொண்டாடப்படுகிறது.  இந்த ஜெய வருடம் மார்கழி மதம் 9,19,11,12 ஆகிய தேதிகளில் (டிச. 24,25,26,27) நடைபெறுகிறது. மாம்பழ துறை ஸ்ரீ பகவதி புஷ்கலா  அம்மன் கோவில் ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  ஆரியங்காவில் இருந்து கழுதரெட்டி மற்றும் வெள்ளிமலை ஆகிய ஊர்கள் வழியாக ஜீப் அல்லது பஸ் மூலம் கோவிலை அடையலாம்.  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரயும் அழைக்கிறது ஆரியன்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகாஜன சங்கம்.

Saturday, 13 December 2014

"Hedde Jemai" Sourashtri language Screen Play


"  ஹெ ட்3டெ3  ஜெ மை "  சௌராஷ்ட்ரி மொழி திரைப்படம் திருபுவனத்தில் ஜெகேவிஎஸ் மஹாலில் திரையிடப்பட்டது.  நவம்பர் 11ம் தேதி மாலை ஐந்து மணி முதல் இரு காட்சிகளாக திரையிடப்பட்டது.  திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட நீலராவ் அவர்களுக்கு பாராட்டு நடைபெற்றது.  பாராட்டு விழாவிற்கு குஜு லுவான் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாணிக்கான். எஸ். ரமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  பொது மக்கள் பலர் கண்டு களித்தனர்.  முத்துன். ராஜன், லகுடுவான். ஜோதி, மூர்தியம்மா.  அய்யன்சாமி, குஜுலுவான். ராஜேந்திரன், வைத்யம்.  நீலாராவ், கோம்பு3ன். நாராயணன், தாஸுன். சேதுராமன் மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.