Monday, 1 February 2016

Conference of Sourashtra community Representatives of Tamil Nadu


சென்னையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் அகில இந்திய சௌராஷ்டிரா பிரதிநிதிகள் மகாநாடு 26-1-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது !!
சுமார் 10000 இக்கும் அதிகமான சமூக மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்!!
ஏறக்குறைய 160க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் மக்கள் குவிந்தனர்!
காமாராஜர் அரங்கில் 2000 நபர்கள் மட்டுமே உட்காரமுடியும்.   எனவே வெளியே அமர்ந்து  மக்கள் பார்க்கும் வண்ணம் LED திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது .

அதிமுக, பிஜேபி,தமாக கட்சிகளில் இருந்து தலைவர்கள் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு நம் சமூகத்தை பற்றிய பல சுவையான தகவல மற்றும் நம் சமூக மதிப்புகள் பற்றி மிக நன்றாகவே சொன்னார்கள்!
காலை மற்றும் மதியம் உணவு திரு கோடே அவர்கள் மூலம் அளிக்கப்பட்டது!!
நம் சமூகத்தில் உள்ள பல பெரிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்!
மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.  இனிதே மகாநாடு மாலை முடிந்தது.