ஸெளராஷ்ட்ர சமூக மக்களுக்குப் பாத்தியப்பட்ட,
சென்னை - 112, சூளை,
ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் கோவிலில்
ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் உற்சவ மூர்த்தி
பிரதிஷ்டை விழா அழைப்புப் பத்திரிக்கை.
அன்புடையீர்,
நிகழும் ஜய வருடம், தை மாதம் 17ஆம் நாள் (31.1.2015) துவாதசி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், சனிக் கிழமையன்று அதிகாலை, மகர லக்னம், சூரியோதய புண்ணிய காலத்தில்,
மதுரை நகரில் 1843ஆம் ஆண்டில் அவதரித்து 1914ஆம் ஆண்டு வரை வாழ்ந்து, இவ்வுலக மக்கள் உய்யப் பெருமாளின் அருளைப் பெற வழி காட்டிய, ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் உற்சவ மூர்த்தி, மேற்படி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அவ்வமயம் பக்தகோடிகள் அனைவரும் வந்திருந்து நாயகி சுவாமிகளின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
(மதுரை, தியாகி (இராமியா) R.S.இராமகிருஷ்ணன்
அவர்களின் பாரியாள் R.R.கமலம் அவர்களின் நினைவாக)
இராமியா சுமதி
மற்றும் நாயகி சுவாமிகளின் அடியவர்கள்.